நீடாமங்கலம்–மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரிசீலனை கூட்டம்..
8.1.2025 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியம் வாழாச்சேரி கிளையில் பரிசீலனை கூட்டம் பி. வனரோஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி.ஒன்றிய செயலாளர் டி. ஜான்கென்னடி. ஒன்றிய குழு உறுப்பினர் பி. காளியப்பன் கிளை செயலாளர் எ. முருகேசன் மற்றும் கிளை கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் கூட்டத்தின் தீர்மானங்கள்1.வாழாச்சேரி பாலத்தில் இருந்து கிளியனூர் வரை சாலையோரத்தில் 30.ஆண்டுகளாக குடியிருக்கும் 150 குடும்பங்களுக்கு குடிமனைப்பட்ட இல்லாமல் வசிக்கிறார்கள் இவர்களுக்கு இலவச குடிமனப்பட்ட வழங்க வேண்டும். 2.அதங்குடி புதுத்தெருவு ஆற்றங்கரை ஓரம் கோரைஆறு ஆற்றுஒரம் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். 3ஆதங்குடி மனகொண்டான் தெருவில் இருந்து சர்கை கரை செல்லும் வரை மோசமாக இருக்கும் கப்பி சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும்.4.அதங்குடி முள்ளிபள்ளம் கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு பல ஆண்டுகளாக இடுகாடு இல்லாமல் தவித்து வருகிறார்கள் அவர்களுக்கு இடுகாடு இட ஒதுக்கி இடுகாடு கட்ட வேண்டும். 5.அதங்குடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை சம்பந்தமாக விரைவில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது..