fbpx
REஇந்தியா

ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை தொடரும்;மத்திய அரசு!

புதுடில்லி:

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், அத்யாவசியமற்ற பொருட்கள்  விற்க விதிக்கப்பட்டிருந்த  தடை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3 வரை இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் ஏப்.,20 முதல் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:

ஆன்லைன் வணிக நிறுவனங்கள, பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை இயக்குவதற்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தில், அத்யாவசியமற்ற பொருட்களை கொண்டு செல்வதற்கு தடை தொடரும். இவ்வாறு அந்த அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு மின்னணு சாதனங்கள் விற்க தடை இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த தடை அறிவிப்பு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close