முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகுமாருக்கு வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டம்…

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்குவாழ்நாள் சாதனைக்கான மதிப்புறு முனைவர் பட்டங்களை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கு சிவகுமாரின் 2-வது மகன் கார்த்தி,முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ள நிலையில் அவரின் மூத்த மகனும் நடிகருமான சூர்யாவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவரது கடிதத்தில்கூறியிருப்பதாவதுஓவியராகவாழ்வைத்தொடங்கியவர்என்அப்பா.ஒருபுள்ளியில்தொடங்கும்கோடுஎவ்வளவுநுட்பமாகஓவியமாகமாறுகிறதோ… அதைப் போலவே தன் வாழ்வையும் நெறியும் நேர்த்தியுமாய் வகுத்துக் கொண்டவர்.ஒரு கிராமத்திலிருந்து கிளம்பி வந்து, கலையுலகின் கவனம் திருப்பி, எல்லோருக்குமான முன்னுதாரணமாக மாறிய அவருக்கு மதிப்புறுமுனைவர்பட்டம்என்பதுமிகப்பொருத்தமானது. எள்ளளவும் நெறிபிறழாத அவர்வாழ்க்கைக்கும்திறமைக்கும்வாய்த்தஅங்கீகாரமாகவேஇதைப்பார்க்கிறோம்.சிறுவனாக இருந்த காலம்தொட்டு இன்று வரை அப்பாவின் ஆச்சர்ய உயரங்களைக் கண்டு வியக்கும் நான், அவரது உறுதி, உழைப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றையே எனக்கான பாடமாகக் கொள்கிறேன். அவரது சாதனைகளைவிட அவரது வாழ்வியல் விழுமியங்களே (Life Values) என் வாழ்க்கையையும் எண்ணங்களையும் செதுக்கிஇருக்கின்றன. ‘சிவகுமார் அவர்களின் மகன்’ என்பதே என்றைக்கும் எனக்கான அடையாளம்; என் வாழ்நாளுக்கான அங்கீகாரம்.எங்கள் தந்தையின் 60 ஆண்டுகாலப்பயணம்தமிழ்ச் சமூகத்திற்குப்பயன்பட்டிருப்பதன்அங்கீகாரமாகவே இந்தமுனைவர்பட்டத்தைக்கருதுகிறோம். இந்தத் தருணத்தில் மதிப்பிற்குரிய ஓவியர் திரு சந்துரு (எ) குருசாமிசந்திரசேகரன்அவர்களுக்கும்கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம்எங்களுக்குக் கூடுதல் மகிழ்வைத் தருகிறது.இருவருக்கும் மகத்தான கௌரவத்தை வழங்கிய தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்திற்கும், இச்சிறப்பை முன்னின்று வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பிலும், எல்லோர் சார்பிலும்மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சூர்யா கூறினார்.