fbpx
RE

அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை – 30 ஆயிரத்தை தாண்டியது.

உலகையே இன்று கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் பரவி அனைவரையும் பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. இத்தாலி, இஸ்பெயின் , அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொரோனாவிற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் ,இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அனைத்து விஞ்ஞனிகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இருந்தாலும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.பல்வேறு நாடுகள் இதை தடுக்கும் முயற்சியாக ஊரடங்கை அமல்படுத்தி உள்ளனர். இருந்தாலும் நோய் தொற்று அதிகரித்து கொண்டே தான் வருகிறது.

இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தையும் தூண்டியுள்ளது. அதில் அமெரிக்காவில் மட்டும் 6,52,996ஆக உயர்ந்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 30,990-ஆகா உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்ட நாடாக இத்தாலி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close