fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்

சிஏஏவுக்கு எதிராக பேசிய சீமான்…! பாய்ந்தது தேசத்துரோக வழக்கு

Sedition case against Seeman

கோவை: சிஏஏவை எதிர்த்து பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. அந்த சமயத்தில், கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் பிப்.22ம் தேதி இஸ்லாமிய கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக சாடி, கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்போது பேசிய சீமான் மீது, கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் இப்போது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத்துரோகம், விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close