fbpx
Others

தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம்—படங்களுடன் விரிவானசெய்தி…

தென் மாநில முதல்வர்கள் மாநாடு தருணங்கள் -  புகைப்படத் தொகுப்பு Image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம், இன்று (ஆகஸ்ட் 20) கோவளத்தில் நடைபெற்றது. இந்த தென் மண்டலக் குழுவில், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களும் உறுப்பினர்களாக உள்ளன.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தென் மண்டலக் குழுவின் தலைவராகவும், தமிழக முதல்வர் விஜய் துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்தக் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன், தெலங்கானா துணை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் விஜய்,“நீலபொருளாதாரமேம்பாட்டுக்கு அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். தென் மண்டல மாநிலங்களின் வளர்ச்சிக்கு கடல்சார் பொருளாதரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதில் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் துறைமுகம்,சரக்குபோக்குவரத்து, மீன்வளம், கடல் சுற்றுலா ஆகியவை மேம்படும்.சரக்கு கப்பல் போக்குவரத்து விரிவாக்கம் மூலம் போக்குவரத்து செலவு குறைவது தொழில்துறையை மேம்படுத்தும். 1,076 கிலோ மீட்டர் கொண்ட கடல் வழிப் போக்குவரத்து, சுற்றுலா வளர்ச்சிக்கு மாநிலங்களுடன் இணைந்துசெயல்படதயார்.போதைப்பொருளைஒழிப்பதில்ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும். கீழ்நிலை நீர் பிடிப்பு மாநிலங்களின் சட்டபூர்வ உரிமைகள், மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். நதிநீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளின் முடிவுகள் அமல்படுத்தப்பட வேண்டும்.முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்த நீதித்துறை உத்தரவுப்படி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கை, அறிவியல் ஆதாரங்கள் சட்டத்தின் மீதான மதிப்போடுநதிநீர்பிரச்சினையைஅணுகவேண்டும்.பிளஸ்டூதேர்வுமதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள்பாதிக்கப்படுகின்றனர்.எனவேநீட்தேர்வில்தமிழகத்துக்குவிலக்குஅளிக்கவேண்டும்.தொகுதி மறுவறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்ற சட்டபூர்வ உறுதிமொழி தேவை. தொகுதி மறுவரையறையால் எந்த ஒரு மாநிலத்தின் பிரதிநிதித்துவம்குறையாதுஎனமத்தியஅரசுசட்டபூர்வஉத்தரவாதம்தரவேண்டும்.போதைப்பொருள்களின்ஆன்லைன்விற்பனையைதடுக்கசட்டவிதிகளைகடுமையாக்கவேண்டும்.மாநிலங்களுக்கிடையேஉளவுத்தகவல்களை பகிர்வதன் மூலம் தென் மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்த தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும்.கர்நாடகாவின்பொம்மச்சந்திரா – ஓசூர் வரை மெட்ரோவை நீட்டிக்கும் திட்டம் சிறந்த உள்கட்டமைப்பாக இருக்கும்.நாட்டின் பொருளாதாரத்தில் தென் மாநிலங்கள் 30 சதவீதம் பங்களிப்பை வழங்குகின்றன. எனவே தென்மாநிலங்களின் செயல் திறன், வளர்ச்சி, முதலீடுகளை கருத்தில் கொண்டு நியாயமான நிதி பகிர்வை வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரம்புகளை தீர்மானிக்கும் நெகிழ்வுத் தன்மையை மாநிலங்கள் மீண்டும் பெறவேண்டும்” என்று தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close