Others
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்— சிறப்பு செய்தி…
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம், நீலகிரி மாவட்டம் மற்றும் PSG மருத்துவமனை, கோயம்புத்தூர் இணைந்து நடத்திய பழங்குடியின மக்களுக்கான இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை முகாம், ஆகஸ்ட் 1ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது.**இந்தவிழாவினைதமிழ்நாடுபத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் DSR. சுபாஷ், நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் Dr. சீனிவாசன், கூடலூர் RDO திரு. குணசேகரன், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. ராமகிருஷ்ணன், நேஷனல் எக்ஸிகியூட்டிவ் மெம்பர் திரு மோகன் ராஜ் மற்றும் கோவை PSG மருத்துவமனையின் மார்க்கெட்டிங் மேனேஜர் திரு. ஜானகிராம் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.**புதுச்சேரி யூனியன் தலைவர் தோழர் எம். பி. மதிமகாராஜா, தென் சென்னை மாவட்ட தலைவர் A. லட்சுமணன், கோவை ஸ்டாலின், ராஜா ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.**இந்த மருத்துவ முகாமில் தெப்பக்காடு யானைகள் காப்பகம் பகுதியை ஒட்டியுள்ள, லைட்டர்பாடி, தேக்குபாடி,
யானைபாடி ஆகிய கிராமங்களில் வாழும் பூர்வீக பழங்
குடிகளான பெட்ட குறும்பர், காட்டு நாயக்கர், பணியர், இருளர், முள்ளு குறும்பர் மற்றும் மனுஷர் ஆகிய பழங்குடிகள் மக்கள் திரளாக கடந்து வந்து மருத்துவ ஆலோசனையும்,மருத்துவஉதவியும்பெற்றுசென்றனர்.**இந்தமுகாமில்PSGமருத்துவமனையை சேர்ந்த பொது மருத்துவம், எலும்பு மருத்துவம், தோல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, நுரையீரல் சிகிச்சை, காது மூக்கு தொண்டை சிகிச்சை, கண் சிகிச்சை போன்ற சிகிச்சைக்கான சிறப்பு மருந்துவர்கள் கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கினர். தேவையுள்ளவர்களுக்கு இலவசமாக கண்கண்ணாடிகள் மற்றும் மருந்து ஆகியவையும் வழங்கப்பட்டது. சுமார் 250க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இம்முகாமில் பயனடைந்து சென்றனர்.**மேலும் இந்த முகாமின் ஒரு பதியாக பழங்குடியின மக்களுக்கு தொழில் பயிற்சி அளித்து, தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக, நீலகிரி மாவட்ட தொழில் மையத்தின் Programme Manager திரு. கோபால்சாமி அவர்கள் மிகவும் பின் தங்கிய பழங்குடியின மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை குறித்து விளக்கமாக பேசியதும் விழாவின் முத்தாய் பாக அமைந்தது.**இந்த விழாவில் நீலகிரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு. ஜெரால்டு அனைவரையும் வரவேற்க, நீலகிரி மாவட்ட தலைவர் திரு. சகாயராஜா
அனைவருக்கும் நன்றி கூறினார். குறிப்பாக இந்த மருத்துவ முகாம் சிறப்பாக நடந்தேற அனைத்து ஏற்பாடுகளையும், உதவிகளையும் நல்கிய தெப்பக்காடு வன சரகர் திரு. சிவக்குமார், மற்றும் திரு. இராமர், கூடலூர் வட்டாட்சியர் திரு. முனீஷ், கூடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கோபால கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் திரு. முரளிதரன் அத்துடன் Nawa நிறுவனத்தின் இயக்குநர் திரு. ஆலுவாஸ் மற்றும் புஷ்பராஜ் ஆகியோருக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.*