fbpx
Others

செங்குன்றம்—சிங்கப் பெண் அதிரடிப் படை சார்பில் விழிப்பு உணர்வு… சிறப்பு செய்தி.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைத்துள்ள சிங்கப் பெண் அதிரடிப் படை சார்பில் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி பவானிநகர் குடியிருப்போர் நலச் சங்கம், ஸ்ரீ பவானி அம்மன் ஆலய நிர்வாகிகள் ஏற்பாட்டில் பெண்கள் பாதுகாப்பு, பாலியல் உள்ளிட்ட பெண்கள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி பவானி குடியிருப்போர் நலச் சங்கச் செயலாளரும் பவானி அம்மன் ஆலய அறங்காவலருமான பி.என்.கே. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.பவானிநகர் குடியிருப்போர் நலச் சங்க துணைச் செயலாளர் எம்.முகம்மது அபுபக்கர் அனைவரையும் வரவேற்றார்.குடியிருப்போர் நலச் சங்கம்,ஆலயநிர்வாகிகளுமான கே.ராஜவேலு, ரமேஷ், தியாகு, ரகு மற்றும் ஆலய மகளிர் குழுவினர் முன்னிலைவகித்தனர் .சிங்கப் பெண் அதிரடிப் பிரிவு உதவி ஆய்வாளர். ஜெயந்தி, பிரபாகரன், நிஷாந்தினி, இந்துமதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு ஏற்பாடும் பிரச்னைகள், பாலியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைஎவ்வாறு கையாள வேண்டும் என்பதை எடுத்து கூறி விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.பவானி நகர் குடியிருப்போர் நலச் சங்க பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Related Articles

Back to top button
Close
Close