fbpx
Others

தாளவாடி –ஒற்றை காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்பிய 6 பேர்…

முதியவரை தாக்கிய ஒற்றை காட்டு யானை..! கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில்  அனுமதி..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் அருகே பூதாளப்புரம் கிராமத்தில் இன்று அதிகாலை நுழைந்த ஒற்றைக் காட்டு யானை ஜடேமாதப்பா என்பவரது வீட்டை சூரையாடியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது யானை தாக்கத் தொடங்கிய நிலையில், குடும்பத்தினர் அனைவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அச்சத்துடன் அனைவரும் பதுங்கியபடி வீட்டை விட்டு ஓடிச் சென்று யானையிடமிருந்து உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் கிராமத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close