fbpx
Others

காஞ்சிபுரம் சிலம்பாட்டக் கழக ஆலோசனைக் கூட்டம்….

காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாங்காட்டில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.வருகிற ஜூலை 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள தேசிய சிலம்பாட்டப் போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் மாணவர்களை பங்கேற்கச் செய்வது தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.போட்டிக்கான வீரர் தேர்வு,
பயிற்சி ஏற்பாடுகள் மற்றும்நிர்வாகநடவடிக்கைகள்குறித்தும்கலந்துரையாடப்பட்டது.அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூன் 28ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணி அளவில், உதயகிரி சிலம்பாட்டம் அலுவலகம், மாங்காடு பகுதியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.மாவட்டத்துடன் இணைந்துள்ள அனைத்து கிளைச் செயலாளர்களும் மற்றும் நிர்வாகிகளும் அக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு தங்களது ஆலோசனைகளையும்,
ஒத்துழைப்பையும்வழங்குமாறுகாஞ்சிபுரம்மாவட்டசிலம்பாட்டக்கழகம்கேட்டுக்கொள்கிறது.இக்கூட்டத்தில் கார்த்திக் பழனிச்சாமி, பாண்டியன், சண்முகம், திரவியம், ,சுந்தர்ராஜ், கோவிந்தன், கிறிஸ்டினா, வெங்கடேசன், ராஜேந்திரன் கலந்து கொண்டனர்,முன்னதாக சமீபத்தில் பாரத் சிலம்பம் பெடரேஷன் தலைவர். முத்துராமன்ஜி அவர்கள் மூலம் தமிழ் நாடு மூத்த பாரம்பரிய சிலம்ப தொழில் நுட்ப செயலாளராக நியமிக்கப்பட்ட எஸ். ஆர். லட்சுமணன் கூட்டத்தில் கௌரவிக்கப்பட்டார்.முடிவில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்.
எஸ்.ஆர்.லட்சுமணன் நன்றி தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close