காஞ்சிபுரம் — மாவட்ட அளவிலான சிலம்பாட்டபோட்டி—சிறப்பு செய்தி

காஞ்சிபுரம்மாவட்டசிலம்பாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி படப்பை ராசி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக தலைவர். முத்துராமன். ஜி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர். லட்சுமணன் வரவேற்றார்.கல்லூரி இயக்குனர். ரங்கநாதன், ரேணுகா தேவி மணிமங்கலம் காவல் ஆய்வாளர். டில்லி பாபு முன்னிலை வகித்தனர்.போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் செயலாளர்முருககனி ஆசான், நாஞ்சில். சுரேஷ் ராஜேந்திர ஆசான் கலந்து கொண்டனர்.மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளான பிரபாகரன், கார்த்திக், பழனிசாமி, திரவியம், பாண்டியராஜன், பிரசாந்த், லோகநாதன், சண்முகம், வெங்கடேஷ், கீர்த்தி பிரியன், சரவணன், ருத்ர காளத்தி, மோகனப்ரியா, பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.