Others
அரசின்கவனத்திற்க்கு– பொன்னேரி கல்வி மாவட்டத்தின் அவலநிலை….?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் பகுதியில் 10க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகள் தரமற்று இருப்பதோடு ,தகுதியற்ற ஆசிரியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.சில பள்ளிகளில் விளையாட்டு திடல் கிடையாது.சில பள்ளிகளில் வெளிச்சம், காற்றோட்டம், கிடையாது.போதிய கழிப்பறை இல்லை.தரமான குடிநீர் வசதி இல்லை.மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குட்பட்டு வருகிறார்கள்.பள்ளி கட்டணம் அதிகமாக வாங்கப்படுகிறது.இதனை உடனடியாக பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரிகள்,திருவள்ளூர் மாவட்ட கல்விஉயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும்,சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளார்கள்.