fbpx
Others

நீடாமங்கலம்–கழிவு மேலாண்மையின் 5 ‘R’கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்..


நீடாமங்கலம் ஆகஸ்ட் 21
மாசுபாட்டை குறைப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் தேவி லெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் R5 மேலாண்மை பற்றி மாணவர்களிடம்கலந்துரையாடல்நடைபெற்றது.  குறைவான குப்பைகளை உருவாக்கும் வகையிலும், வழிகாட்டியாக அமைகின்ற அந்த ஐந்து படிகளானது மறுத்தல், குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல், மேம்படுத்திப்பயன்படுத்துதல், மற்றும்மறுசுழற்சிசெய்தல்போன்றபடிகளாகும்.மறுத்தல்:உங்களுக்குத்தேவையில்லாதவற்றை வேண்டாம் என்று சொல்லுங்கள்.ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள், உறிஞ்சு குழல்கள்மற்றும்கோப்பைகளைத்தவிர்க்கவும்.குறைத்தல்:ஒட்டுமொத்தமாககுறைவாகவாங்குங்கள்மற்றும்பயன்படுத்துங்கள்.தேவையற்ற பொருட்களை வாங்குவதை நிறுத்த, திட்டமிடுங்கள்.மறுபயன்பாடு:பொருட்களைஒன்றுக்குமேற்பட்டமுறைபயன்படுத்துதல்.தண்ணீர் பாட்டில் அல்லது துணிப் பையை எடுத்துச் செல்லுங்கள்.உடைந்த பொருட்களைத் தூக்கி எறிவதற்குப் பதிலாகச் சரிசெய்யுங்கள்.மறுபயன்பாடு: பழைய பொருட்களுளை மறுமுறை பயன்படுத்தும் வகையில் மாற்றுங்கள்மறுசுழற்சி: பழைய குப்பைகளை புதிய பொருட்களாக மாற்றுங்கள்.காகிதம், கண்ணாடி, பிளாஸ்டிக்கினை பொருட்களை உள்ளூர் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்புங்கள். இவ்வாறு கடைபிடித்து நெகிழி இல்லா உலகம் படைக்க அனைவரும் உறுதியேற்போம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் மாணவர்கள் தமிழ் வெண்பா, தர்ஷன், மோனிகா, ரிசிகா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close