தேனி –கம்பம் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்..
தேனி மாவட்டம் கம்பம் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்: கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்புமுகாம்அரசுமருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில், 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன.அதன்படி தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.இந்தச் சிறப்பு முகாமில்கம்பம்சட்டமன்றஉறுப்பினர்ஜெகநாத்மிஸ்ராமற்றும்மாவட்டவருவாய்அலுவலர்ராஜகுமாரன்ஆகியோர்கலந்துகொண்டு, போலியோ சொட்டு மருந்து முகாமினைத் துவக்கி வைத்தனர்.இம்முகாமிற்கு கம்பத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து, ஆர்வத்துடன் போலியோ சொட்டு மருந்து செலுத்திச் சென்றனர்.நடைபெற்ற இந்தச் சிறப்பு முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் முருகன், நகர்ப்புற நலவாழ்வு மையத்தின் மருத்துவர் மீனாட்சி சுந்தரம், சித்த மருத்துவ அலுவலர் சிராஜுதீன்உள்ளிட்டமருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.