கொடுங்கையூர்– அதியா பாத்திமா 2 வயது உயிரிழப்பு போலீஸார் விசாரணை…..
குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டில் கணவரைப் பிரிந்த கஷியா, தனது 2 வயது குழந்தை அதியா பாத்திமாவுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வைத்துவிட்டு கஷியா வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மாலையில் எழுப்பச் சென்றபோது, குழந்தை அசைவின்றி இருந்துள்ளது.அதிர்ச்சியடைந்த கஷியா, உடனடியாக குழந்தையை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த இளம்பெண் கஷியா (21). இவரது கணவர் சையத் நயாப்ஜனி வெளிநாட்டில் வேலை செய்வதாக கூறப்படுகிறது..இதுகுறித்து மருத்துவமனை கொடுத்த தகவலின்பேரில், கொடுங்கையூர் போலீஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.