ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான மாநாடு 2 நாட்கள் நடக்கிறது…

த.வெ.க. ஆட்சி அமைந்து ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான மாநாடு இன்று (திங்கள்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக போலீஸ் டி.ஜி.பி. அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், சரக டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்கள், வனத்துறை உயர் அலுவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாநாட்டில் நடக்கும் 2-வது அமர்வில் கலெக்டர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் அனைத்து அரசுத் துறைகளின்.பயன்களும் மக்களுக்கு சென்றடைந்துள்ளதா? அதில் இருக்கும் தடங்கல்கள் என்ன? என்பது போன்ற அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகிறது3-வது அமர்வில் கலெக்டர்கள் மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். 2 நாட்களாக நடக்கும் இந்த அமர்வுகளின் நிறைவில் முதல் அமைச்சர் விஜய் உரையாற்றகிறார். அப்போது திறமையான செயல்பட்ட கலெக்டர்,போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளை பாராட்டி பரிசுகளை வழங்குகிறார்.
..
…
..