fbpx
REதமிழ்நாடு

உண்பதற்கு உணவின்றி மதுரையில் தவிக்கும் தொழிலாளர்கள்

workers suffer without food in madurai near usulampatti

விவசாய கிணறு தோண்டும் பணிக்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பாக திருச்சங்கோடு மாவட்டத்திலிருந்து சுமார் 10 குடும்பத்தை சேர்ந்த 40 பேர் மதுரை மாவட்டம் ,உசிலம்பட்டிக்கு வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஒப்பந்த ஊழியர்கள் என்பதால், இவர்களின் வேலையை பொறுத்தே இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

இவர்கள் அனைவருக்கும் பணிக்கு வந்த புதிதில் நல்ல வருமானமும் கிடைத்துள்ளது. அந்த வருமானத்தில் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொண்டுள்ளனர். மீதம் உள்ள பணத்தை தங்களது குழந்தைகளின் படிப்பு செலவிற்காக சேர்த்து வைத்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஒரு மாதமாக அவர்களின் வேலை தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக வருமானம் ஏதும் ஈட்ட முடியவில்லை. இதன் விளைவாக தொழிலாளர்கள் அனைவரும் பசியில் தவித்து வருகின்றனர்.

தங்களின் குழந்தைகளுக்கு பால் கூட வாங்கி கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களின் ரேஷன் அட்டையும் வீடுகளிலையே வைத்து உள்ளதால், தற்பொழுது அவர்களால் எந்த இலவச பொருட்களும் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

தொழிலாளர்களில் ஒரு பெண் கூறியதாவது,”வருமானம் எப்பொழுது வேண்டுமானாலும் ஈட்டலாம் என்ற நம்பிக்கை உள்ளது.அனால் தற்பொழுது எங்களின் 3 நேர பசியை போக்குவது கடினமாக உள்ளது”,என்று கூறியுள்ளார்.உதவும் மனப்பான்மை கொண்ட சிலர் அரிசி வழங்குகின்றனர்.அனால் மற்ற மளிகை பொருட்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் கஞ்சியையும் புளியையும் கரைத்து,தங்கள் குழந்தைகள் மற்றும் தங்களின் பசியை போக்கிக் கொள்வதாக மிகவும் வேதனையுடன் கூறியுள்ளனர்.

தமிழக அரசு முன்வந்து தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டு உள்ளனர். பிழைப்பதற்காக வெளியூர் சென்றவர்களின்  நிலைமை தற்பொழுது இதுதான்.

தங்களின் வயிற்று பிழைப்பிற்காக வெளியில் வேளைக்கு சென்றவர்கள் தற்பொழுது தங்களின் ஒரு வேலை சோற்றிற்கே மன்றாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. கொரோனா இன்னும் என்ன என்ன கொடுமைகளெல்லாம் கொண்டு வர போகின்றது என தெரியவில்லை. இதனை எல்லாம் பார்க்கும் போது மன வருத்தமாக தான் உள்ளது.அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இவர்களை காப்பாற்ற வேண்டும்.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close