RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
சிலை கடத்தல் விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வருவதற்காகவே சிபிஐ விசாரணை: ஆர்.பி. உதயகுமார்
சிலை கடத்தல் விவகாரத்தில் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரைத்ததாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது என்றும் மறைந்த எம்எல்ஏ போஸ் ஆற்றிய பணிகளை வைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.
இந்தியாவிலேயே இரண்டாவது மிகச் சிறந்த மாநிலமாக தமிழகத்தை முதலமைச்சர் முன்னெடுத்துச் சென்று உள்ளார் என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.