fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

கீழடியில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியம்..! இன்று முதல்வர் அடிக்கல்!

TN CM edapaddi palanisamy opens keezhadi museum

சென்னை:

கீழடியில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியம் அமைக்க ரூ.12.25 கோடி ருபாய் ஒதுக்கிய நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டவுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்துவிட்டது. தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

அந்த பகுதியில் முதுமக்கள் தாழிகள், ஓடுகள், குவளைகள், நாணயங்கள், எலும்புக்கூடுகள், எடைக்கற்கள், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள், உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அங்கு அகழாய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.
இதனை பயன்படுத்திய பழந்தமிழர்களின் புகழை உலகளவில் சென்றடைவதற்கு அங்கு ஒரு அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆய்வாளர்கள் தமிழக அரசுக்கு சில நாட்களுக்கு முன் கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், அங்கு உலகத்தரம் மிக்க அருங்காட்சியம் அமைக்க ரூ.12.25 கோடி ருபாய் ஒதுக்கியுள்ளார். மேலும், இன்று காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டவுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close