RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
நிதின் கட்கரியிடம் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவை முதலமைச்சர் அழித்தார்: தமிழிசை
அமைச்சர் நிதின் கட்கரி உடனான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை முதல்வர் அளித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சேலம் எட்டு வழி சாலை மற்றும் உயர்மட்ட சாலை அமைப்பதற்காக தமிழக அரசு பெற்ற நிதி மற்றும் திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு கூட்டம் சென்னை அடையாறில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு கூட்டத்தின் போது தமிழகத்திற்கு வரவேண்டிய சாலைத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்ததாக குறிப்பிட்டார்.