தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் சேவை மீண்டும் பாதிப்பு – தண்டவாள விரிசலே இதற்கு காரணம்
சென்ற மாதம் புறநகர் ரயில் சேவையில் நிழந்த கோளாரில் புறநகர் ரயில்கள் விரைவு ரயில் பாதையில் மாற்றி இயக்கபட்டன . இதன் காரணமாக நிழந்த கூட்ட நெரிசலால் 4 க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
தற்போது மீண்டும் ரயில் தண்டவாளம் விரிசல் காரணமாக தாம்பரம் – செங்கல்பட்டு இடையேயான ரயில் சேவை மீண்டும் பாதிக்கபட்டுள்ளது. தாம்பரம் செங்கல்பட்டு இடையேயான சிங்கபெருமாள் கோயிலின் அருகில் ரயில் தண்டவாளத்தில் திடீரென்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சிங்கபெருமாள் மற்றும் காட்டாங்குளத்தூர் இடையிலான ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் ரயில் சேவை குறைவாக இயக்கபடுகிறது.
அதனால் அவ்வழியாக செல்லும், புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் தாமதமாக இயங்கிவருகின்றன . ஆகவே ரயில்வே ஊழியர்கள் தற்போது அதனை சரி செய்யும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . இதன் காரணமாக தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான பகுதியில் ரயில் சேவை கிட்டத்தட்ட 2 மணிநேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாள்தோறும் அவ்வழியாக பயணிக்கும் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாயினர்.