fbpx
Others

திருப்பத்தூர்–அடாவடி வசூலில் ஆம்பூர் சார் பதிவாளர் பாலமுருகன்..?

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டார்கெட் அடாவடி வசூலில் ஆம்பூர் சார் பதிவாளர் பாலமுருகன்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர்தோல் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன இதனால் இப்பகுதி எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும், இதனால் இப்பகுதியில் வீடு கட்ட இடம் வாங்குவதும் விற்பதும் போன்ற தொழில்கள் தீவிரமாக காணப்படுகின்றன இதன்காரணமாக அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகம் எப்பொழுதும் கூட்டம் நிறைந்து காணப்படும், இங்கு சார் பதிவாளராக பணியாற்றுபவர் பாலமுருகன் இவர் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிந்த போது லஞ்சம் பெற்றுக்கொண்டு முறையற்ற பத்திரங்களை பதிவு செய்கிறார் என்று பல்வேறு புகார்கள் வரவே அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார், இங்கும் அதே பாணியில் தனக்கு வேண்டிய சில புரோக்கர்களை கைவசம் வைத்துக் கொண்டு தொடர்ந்து செயலில்செயல்படுகிறார் என்று சக அலுவலகஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர், இவரதுசெயல் பதிவுக்கு வரும் ஆவணங்களில் சிறு தவறை கண்டுபிடித்து அவற்றிற்கு ஒரு ரேட், ஆவணங்களில் குளறுபடிகள் இருந்தால் அவற்றை சரி செய்து முடிக்க பெருந்தொகை, களப்பணி என்ற பெயரில் பதிவு செய்யப்படும் இடங்களை பார்வையிடுதல்என்ற பெயரில் அதில் சில தவறுகளை சுட்டிக்காட்டி பெரும் தொகை பெற்றுக் கொண்டு அந்தப் பணியை கச்சிதமாக முடிப்பது இவருக்கு ஒரு கைவந்த கலை, பெரிய தொகைக்கு தானே டீலிங் செய்து கச்சிதமாக முடித்து யாருக்கும் தெரியாதது போல் வேலையை முடிப்பாராம்,சிறிய தொகைக்கு அங்கு இவருக்கு வேண்டிய புரோக்கர்கள் மூலம் தூதுவிட்டு கச்சிதமாக காய் நகர்த்துகிறார் என்று வட்டாரர்கள் தெரிவிக்கின்றன, இவர் வாங்கும் லஞ்சத்தில் அலுவலக ஊழியர்களுக்கு எறும்புக்கு தீனி போடுவது போல கால் பாகம் சிறிதளவு கொடுத்து விட்டு முக்கால் பாகம் பாக்கெட்டில் போட்டு சென்று விடுகிறார் என்று அலுவலக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர், இவரை பார்ப்பதற்கு ஆந்தை தோரணையில் அமைதியாக காணப்படுவார், பணத்தை பிடுங்குவதில் பருந்துவைப்போல இப்படியாக சேர்த்த லஞ்சத்தில் குறைந்த காலத்திலேயே உறவினர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்று கூறப்படுகிறது, இவர் கேட்கும் தொகையில் குறைத்து வழங்க பேரம் பேசினால் நான்வாங்கும் லஞ்சம் எனக்கு மட்டுமல்ல அமைச்சர், மாவட்ட பதிவாளர் மாநில பதிவாளர் ஆடிட்டிங் பார்க்கும் அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறை போன்றோருக்கு பங்கு போடவே சரிபோகிறது, எனக்கு இதில் ஒன்றும் இல்லை என்று கேட்பவரிடம் கூலாக பதில் கூறுகிறார், இவர் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணி ஏற்றுக்கொண்ட நாள் முதல் இன்றைய நாள் வரை பதிவு செய்த ஆவணங்களை ஆய்வு செய்தால் இவரின் தில்லுமுல்லு தெரியவரும் ஏற்கனவே இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் புரிந்த சில சார்பதிவாளர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை இடம் வசமாக மாட்டிக் ார்கள் என்பதுஎல்லோரும் அறிந்தவை,எனவே பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிவுத்துறை ஆணையர் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட பதிவாளர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோர் தங்கள் பெயருக்கும் தமிழக அரசின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் பாலமுருகன் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டால் பல திடக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்பதில் அச்சமில்லை.

 

Related Articles

Back to top button
Close
Close