fbpx
Others

ஆற்காடு நகராட்சி நிர்வாகம் தூங்குகிறதா…?

ஆற்காடு லட்சுமணன் பூங்காவில் ஒரு வாரமாக விழுந்து கிடக்கும் மரம் நடவடிக்கை எடுக்காத ஆற்காடு நகராட்சி நிர்வாகம்….

ஆற்காடு அண்ணா சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே லட்சுமணன் பூங்கா செயல்பட்டு வருகிறது இப்பூங்காவில் கடந்த வாரம் இடியுடன் பெய்த கன மழையில் பூங்காவிலுள்ள பூங்க மரத்தின் மீது இடித்தாக்கியதில் மரம் இரண்டாகப் பிளந்து பூங்காவின் நடைபாதையில் விழுந்துள்ளது இம்மரம் விழுந்து சுமார் ஒரு வாரமாகியும் இதுவரையிலும் அகற்றப்படவில்லை இதனை நகராட்சி மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிந்திருந்தும் மெத்தனமாக உள்ளனர் இதனால் தினமும் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் பூங்காவில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக கொசுக்கள் உட்பகுத்தி அதிகமாகிறது கொசு மருந்தும் அடிக்கவில்லை பூங்காவிலுள்ள ஆண்கள் கழிவறை பயன்படுத்த முடியாத மோசமான நிலையில் உள்ளது பூங்காவிலுள்ள இக்குறைபாடுகளை விரைவில் சரி செய்து தர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் நடவடிக்கை எடுக்குமா? நகராட்சி நிர்வாகம்

Related Articles

Back to top button
Close
Close