fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த (?) பிரபல போலி டாக்டர் கைது…!

Thanikachalam arrested for spreading rumours

சென்னை: பிரபல சித்த வைத்தியரும், இயற்கை மருத்துவருமான திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டு பிடித்து விட்டதாக தவறான செய்தியை பரவவிட்டு, பொதுமக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

புகாரில் கொரானா தொற்றுக்கு மருந்து கண்டுப்பிடித்துவிட்டதாக மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லை.

சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள மருத்துவமனையின் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் என்பவர் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை மூலம் தவறான செய்தியை பரப்பி வருகிறார்.

பொது மக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் அவர் செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அவர்களால் சென்னை காவல்துறையிடன் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறிய மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close