fbpx
GeneralRETamil News

மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தீவிரம்  உலக மக்களை எவ்வளவு அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

முக்கியமாகத் lock  down என்ற ஊடரங்கு  போட்டுள்ள மத்திய அரசு இதனால் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனைவருக்கும் “தெரிந்த ஒன்றே.

ஒரு சில பதிவு சமூக வலைத்தளங்களின் அவ்வப்போது மனதை உருக வைக்கிறது, கண்கலங்க வைக்கிறது.

ஒரு பக்கம் மருந்து இல்லாமல் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த  ஊடரங்கு அவசியம் என்றாலும்.

இப்படிப்பட்ட கஷ்டமான பதிவுகளை பார்க்கும் போது ஊடரங்கு அவசியமா?

மக்களுக்கு அரசு என்னதான் செய்யப் போகிறது? என்னதான் செய்துள்ளது? என்ற கேள்வி எல்லாம் வருகிறது.

அப்படி ஒரு பதிவுதான் இது, ரோட்டில் சிந்திய பால் எடுத்த ஒரு ஏழை மனிதனும், இன்னொரு பக்கம் அந்த ரோட்டில் சுற்றி திரியும் தெருநாய்கள்  அந்த பாலை எடுக்க முயற்சிக்கிறது.
ஒருவேளை சாப்பாட்டிற்காக அந்த மனிதன் படும் பாடு தான் இந்த பதிவைப் பார்ப்பவர்கள் கண்களை கலங்க வைக்கிறது.

ஆக்ராவில் இருக்கக்கூடிய ராம்பா சய்பாரா  சாலையில்  பால்  கொண்டுபோகும் பெரிய கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விட்டது. அதனால் அந்த கன்டெய்னர் லாரியில் உள்ள எல்லா பாலும் ரோட்டில் சிந்திய நிலைமையில் தான் இந்நிகழ்வு நடந்திருக்கிறது.

தாஜ்மஹாலில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

சிந்திய பாலை அங்குள்ள ஏழை மனிதன் ஒரு பெரிய பானையை எடுத்து வந்து தனது கையில்  பாலை எடுத்து நிரப்பி வந்த அதே சமயம் அந்த மனிதனுக்கு பக்கத்தில் அந்த ரோட்டில் இருக்கும் தெரு நாய்கள் எல்லாம் அந்த பாலை நக்கி சுவைத்து கொண்டிருந்தது.

நாடு முழுவதும் Lock down  இப்படியிருக்கையில் மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது ஊடரங்கு.

Lock down போடப்பட்ட ஆரம்ப காலத்தில் தின தொழிலாளர்கள், தினக் கூலிகள், உழைத்து பிழைக்கும் மனிதர்கள், நடந்தே அவர்களின் சொந்த ஊருக்கு  சென்றன.

அவர்கள் ஊருக்கு போவதற்கு நடந்தே ஆரம்பித்த 80 கோடி மக்களுக்கு உணவு மானியம், நேரடி பண பரிமாற்றம் செய்ய மத்திய அரசு அறிவித்தது ஆனால் இந்த திட்டம் சரிவர நடைபெறவில்லை.

அரசு தரும் நிவாரணங்களை அடைய பல போட்டிகள்  பயங்கரமாக நடந்து வருகிறது.

பல இடங்களில் ஏழை மக்கள் போலீஸ் கிட்ட அடி வாங்கும் சம்பவம் நடந்து வருகிறது.

இச்சூழ்நிலையில் தான்  ரோட்டில் சிந்திய பாலை குடிக்க மனிதனும் நாயும்,  அந்த காட்சியை சமூகவலைதளத்தில் பரவி வருகிறது, இதைப் பார்க்கும் அனைவருக்கும் கண்களிலும் கண்ணீர் கசியத் தொடங்கும்.

நாட்டு மக்களுக்கு கொடுக்கும் பணமும், இலவசமும் அவர்களைச் சென்று அடைகிறதா? என்றால் அதற்கு கேள்விக்குறியே.!

இந்த அரசாங்கம் ஏழைகளின் வறுமைகயை போக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?

இன்னும் இந்த கைதட்டலும், விளக்கு ஏற்றவும் தான் அரசு செய்தது, இதை செய்தால் ஏழைகளுக்கு பசி போகுமா?

ஊடரங்கால் பாதிக்கும், உண்ண ஒரு வேளை உணவுக்காக ரோட்டில்  இருக்கும் பாலை குடிக்கும் அவல நிலை தான் ஏழைகளுக்கு, இதற்க்கு என்ன பதில் வைத்துள்ளது இந்த அரசு?

இங்கு  தான் ஓட்டை விற்று விட்டு இலவசத்தை  தேடி ஓடி திரிகின்ற அவல நிலை  நம் நாட்டில்..

?V. NandhiniPrakash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close