திருப்பத்தூர்—பொதுமக்களுக்குஅச்சத்தைஏற்படும் தெரு நாய்கள்…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அமைந்துள்ள ஜாப்ராபாத் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் கட்டுப்பாடின்றி சாலைகளில்சுற்றிதிரிவதுபொதுமக்களுக்குஅச்சத்தைஏற்படுத்தியிருக்கிறது.பொதுமக்களை மட்டுமல்லாது ஆடு, கோழி போன்றவைகளையும் தெருநாய்கள் தாக்குவதால் அப்பகுதிகளில் தெருநாய் தொல்லை பெரும்பிரச்னையாகஇருக்கிறது.இதுபற்றி அப்பகுதி மக்கள், “தெருநாய்கள் ஒட்டுமொத்தமாக கூட்டமாகசுற்றுகின்றன.இரவுநேரங்களில் சாலையில்செல்வோர்களையும்,இருசக்கரவாகனங்களையும்கூட்டமாகத்துரத்துகின்றன.ஆடுகள், கோழிகள்போன்றவற்றைதெருநாய்கள்தாக்குவதால்விவசாயகுடும்பங்கள்பாதிக்கின்றன.பொதுமக்களையும்,முதியவர்களையும்நாய்கள்துரத்திக்கடிக்கின்றன”எனக்கூறுகின்றனர். இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஜாப்ராபாத் பகுதி மக்கள் கடந்த வாரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் திரண்டு, “நாங்கள் இந்த நாய்களை வெறுக்கவில்லை. ஆனால்,நம்மைபாதிக்கும்வகையில்இவைகட்டுப்பாடின்றி
கட்டுப்பாடின்றி சுற்றித் திரிகின்றன.சில சமயங்களில் மக்களின்உயிருக்கே ஆபத்தாக இருக்கிறது. தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தநடவடிக்கைவேண்டும்”எனவலியுறுத்தினர். அதற்கு அதிகாரிகள், “தெரு நாய்கள்மனிதஉயிர்களுக்கு ஆபத்துஏற்படுத்தும்நிலையில்உள்ளதால்அவற்றைபாதுகாப்பாகபிடித்து,நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும்”என உறுதியளித்தனர்.அதிகாரிகளின் இந்த வாக்குறுதியைத் தொடர்ந்து பொதுமக்கள், “விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தக்கட்டமாக போராட்டத்தில் இறங்குவோம்” என்றனர்.