GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
ஊரடங்கு தளர்வால் அவதியுறும் நாடுகள்…! 15வது இடத்தில் இந்தியா!
Corona Relaxation nation list: India among 15 countries

டெல்லி:
ஊரடங்கு தளர்வால் அதிகம் பாதிக்கப்பட்ட உலகநாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளன. இந்தியாவிலும் இப்போது 5ம் கட்ட ஊரடங்கு, அமலில் உள்ளது.
ஆனால் மத்திய, மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. ஊரடங்கு தளர்வானது கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி வருகிறது.

இந் நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வு ஒன்றில், ஊரடங்கு தளர்வு அளிக்கப்படுவதால் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக 15 நாடுகளை பட்டியலிட்டுள்ளது.
15 நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா, சிலி, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கொரோனா பாதிப்பு அதிகமாகும் என்று நிபுணர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.















