சோழவரம் வட்டாரத்தில் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா !

தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சோழவரம் வட்டாரம் சார்பில் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி வி.எம்.ஜி. மஹாலில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம். எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கி வளைகாப்பு நிகழ்வை துவக்கி வைத்து 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கினார்.சோழவரம் தெற்கு ஒன்றியதி.மு.க செயலாளரும், சோழவரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைப் பெருந்தலைவருமான மீ.வே.கர்ணாகரன் முன்னிலை வகித்தார்.சோழவரம் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சு.ஷாலினி அனைவரையும் வரவேற்றார்.சோழவரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் அ.காசிம் முகமது, துணைச் செயலாளர்கள் கே.எம்.துரைவேல், ப.சீனிவாசன், பொருளாளர். செ. அரசு உள்ளிட்ட சோழவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க நிர்வாகிகள், உறுப்பினர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கலந்து கொண்டனர். **