fbpx
Others

புதுச்சேரியில் பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்…

Image result for  புதுச்சேரிபுதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்களில் நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் (வரும் வெள்ளி, சனிக்கிழமை) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தேவையான மாற்று ஏற்பாடுகளைசெய்துகொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கும் பணிகளை அம்மாநில அரசின் பொதுப்பணித்துறைWater supply restored to several affected areas, after water pipe burst மேற்கொண்டு வருகிறது. பொது மக்களுக்கு தடையில்லா, சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில் நீர் தேக்க தொட்டி பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை அவ்வப்போது செய்வது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு குடிநீர்விநியோகம்தற்காலிகமாகநிறுத்தம்செய்யப்படும் அதன்படி, வில்லியனூர் குடிநீர் பிரிவு பொறையூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாளை (17.10.2025) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் நாளை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இதேபோல் கோபாலன் கடை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (18.10.2025)சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close