திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் மீது 7-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும்-உச்சநீதிமன்றம் அறிவிப்பு !

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தார். அதாவது, கஜாபுயல் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதால், தற்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடந்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக அவர் அளித்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்த நிலையில், தற்போது ஜனவரி 7-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி மேலும் இருவர் மாரிமுத்து மற்றும் ரத்தினகுமார் ஆகியோர் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து மனுக்கள் மீதான விசாரணை 7-ம் தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது.















