fbpx
RETamil NewsTrending Nowதமிழ்நாடு

ரேஷனில் திடீரென குறைக்கப்பட்ட அரிசியின் அளவு…! எத்தனை கிலோ தெரியுமா?

Rice for ration card holders delimited

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் வரும் 17 வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்திலும் வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் 1000 ரூபாயும், பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களும் இலவசமாக தரப்பட்டன. ரேஷன் கடைகளில் ரூ.500க்கு 19 பொருட்கள் தரும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் 2 நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரேஷன் அரிசியின் அளவு குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ஒரு நபர் அட்டைக்கு 7 கிலோ அரிசி வழங்கப்படும். 2  நபர் கொண்ட ரேஷன் அட்டைக்கு 12 கிலோ அரிசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒரு நபர் அட்டைக்கு 12 கிலோவும், இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது. அரிசி அளவு குறைப்பு அறிவிப்பானது, குடும்ப அட்டைதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close