fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

பணமதிப்பிழப்பு விவகாரம்:பிரதமரின் கருத்தை ஏற்க மறுத்த ஆர்பிஐ புதிய தகவல்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்திற்கு ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் எதிர்ப்பு தெரிவித்த தாக தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இனிமேல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியதோடு, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அப்போது அறிவித்தார்.

முன்னதாக பிரதமர் மோடி ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர்கள் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர்கள் இந்த கருத்தை ஏற்க மறுத்துள்ளனர்.

இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் `மினிட்ஸ்’ எனப்படும் நிகழ்ச்சி நிரல்கள் குறித்த பதிவில் இடம்பெற்றுள்ளது. அதன் பதிவின் மூலம் இந்தத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அப்போது, கறுப்புப் பணத்தை வைத்துள்ளவர்கள் பெரும்பாலும் அதை ரியல் எஸ்டேட், தங்கம் எனச் சொத்துகளாக வைத்துள்ளதால் இந்த அறிவிப்பால்  எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று  கூறியுள்ளனர்.

கறுப்புப் பணம் என்பது ரூ. 400 கோடி அளவில்தான் உள்ளது என்றும், புழக்கத்துக்கு விடப்பட்டுள்ள மொத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது மிகச் சிறிய எண்ணிக்கைதான் என்றும் ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர் இது எதுவுமே மோடி காதில் வாங்கி கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்.

இருப்பினும் உயர் மதிப்பு ரூபாய் நோட்டு தடையால் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கு இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற அரசு தரப்பின் வாதத்தைப் பொது நலன் கருதி ஏற்று, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்த ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கடைசியில் கூறியதாக `மினிட்ஸ்’ தகவல் மூலம் இப்பொழுது தெரிய வந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close