fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

தேசபக்தி என்பது தனிப்பட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல – பா.ஜனதா மீது சிவசேனா ஆவேசம்

புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நம் நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய விமான படை பாகிஸ்தான் எல்லைக்கும் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அளித்தது.

இந்த தாக்குதலால் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர் கட்சிகள் இந்த தாக்குதலின் உண்மை தன்மை குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் பா.ஜ.க எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

 

இது குறித்து பா.ஜ.க -வின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் குறியிருப்பதாவது;

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் பெயர்களை பயன்படுத்தி சில கட்சியினர் வாக்குகளை கேட்பது ராணுவவீரர்களின் மரணத்தை அரசியலுக்கும் செயலாக இருக்கிறது. எதிர் கட்சிகளை தேச விரோதிகள் என்று கூறுவதும் முறையாகாது. இந்த கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. தேச பக்தி என்பது ஒரு தனி கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது நம் இந்தியர் அனைவருக்கும் இருக்கும் ஓர் உணர்வாகும்.

புல்வாமா தாக்குதலுக்கு பின் பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட தாக்குதல் ராணுவத்தின் தலையாய கடைமையாகும், ஆனால் இதற்கு அரசியல்வாதிகள் உரிமை கோருவது மிகவும் தவறானது.ராணுவத்தின் வெற்றியை சிலர் தங்களின் வெற்றி போல் சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரம் செய்கிறார்கள். இந்த வெற்றி ராணுவத்திற்கு கிடைத்த வெற்றி என்று அவர்கள் நினைக்கவில்லை.

பா.ஜ.க எம்.பி சிலர் ராணுவ உடை உடுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள். இதனால் தன அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு இந்த தாக்குதல் நடத்தியது என்று எதிர் காட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அதேபோல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக விமானபடை தாக்குதல் நடத்தியதற்கு கேள்வி எழுப்புவதும் , ராணுவ வீரர்களின் நேரத்தை சந்தேகப்படுவதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close