fbpx
ChennaiRETamil NewsTrending Nowஇந்தியாதமிழ்நாடு

ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி..! தமிழக அரசு அறிவிப்பு!

Online neet coaching class date announced

சென்னை:

2019-2020 ஆண்டுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு 2016ம் ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. 2017ம் ஆண்டு நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. மருத்துவ  படிப்புகளில் சேர நீட் தேர்ச்சி கட்டாயம் ஆகும்.

ஆகையால் அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் இலவச நீட் பயற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தற்போது கொரோனா ஊரடங்கால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தும் நீட் பயிற்சி தொடங்கவில்லை. இந்நிலையில் 2019-2020 ஆண்டுக்கான  அரசு, அரசு  உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ஆன் லைன் நீட் பயிற்சி வரும் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மூலம் விவரம் தெரிவிக்க  முதன்மை கல்வி அலுவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் நீட் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close