RETamil Newsதமிழ்நாடு
அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண்கள் விற்பனை ஆனது அம்பலம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் உமா மறுகூட்டல் மதிப்பெண்களை மாணவர்களிடம் விற்பனைசெய்தது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் இதில் உமா உள்ளிட்ட 10 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மறுகூட்டலில் 10,000 முதல் 5 லட்சம் வரை மதிப்பெண்கள் விற்பனை ஆனது பேராசிரியர் உமாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக பேராசிரியர் உமா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் திண்டிவனம் உறுப்பு கல்லூரியில் முதல்வராக இருந்த விஜயகுமார் மற்றும் அதே கல்லூரியில் பேராசிரியராக இருந்த சிவக்குமார் ஆகியோறையும் அண்ணா பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.