fbpx
OthersRE

கேரள மாநில ஆளுநர் சதாசிவம் கார் அதிவேகம் ;அபராதம் விதித்து கேரள போலீஸ் அதிரடி!

திருவனந்தபுரம்: மிகவும் அதிவேகத்தில் காரில் சென்றதால், கேரள மாநில ஆளுநர் சதாசிவத்தின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் தற்பொழுது  போக்குவரத்து விதிகளில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி வரும் காலங்களில், கார்களில் உள்ள நான்கு நபர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும். அதேபோல் பைக்கில் செல்பவர்களில், இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

இந்நிலையில் கடுமையான போக்குவரத்து விதிகள் நிலவும் கேரளாவில், நேற்று முக்கியமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. சிறப்பு விதிகள் பாதுகாப்பு கொண்ட ஆளுனரிடமே போக்குவரத்து போலீசார் கண்டிப்புடன் அபராதம் விதித்திருப்பதுதான்.

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் கேரள மாநில ஆளுநர் சதாசிவத்தின் கார் அதிக வேகத்தில் சென்றதால் அவரது காருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது பென்ஸ் கார் 80 கிமீ வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 400 அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதலில் போக்குவரத்து காவலர் அபராதம் விதிக்க பயந்து இருக்கிறார், ஆனால் பின் விதிமுறைகளை நினைத்து பார்த்துவிட்டு அப்படி செய்வது தவறு இல்லை என்றதும் அபராத ரசீது கொடுத்துள்ளார்.

இந்த தகவல் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெல்மெட் விதிகளை அறிமுகப்படுத்திய போது, நீதிபதிகள் உதாரணத்துக்காக  கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close