கடவுள் நம்பிக்கை பெயரால் காவேரி ஆற்றில் விடப்பட்ட துணிகள்
திருச்சி : நேற்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் பொருட்டு திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
வேளாண்மை சிறக்க துணை செய்யுமாறு விவசாயிகள் கடவுள் வழிபாட்டை மேற்கொண்டனர்.
இந்தஆடிப்பெருக்கு விழாவை காவிரி நதிக் கரையோரம் மக்களால் விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது.
மேலும் விவசாயம் செழிக்க ஆடிப்பெருக்கு நாளில் விதைகள் விதைக்கப்படுகின்றன.”ஆடி நாள் தேடினாலும் கிடைக்காது”என்ற பழமொழிக்கேற்ப ஆடிப்பெருக்கை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் நம்பிக்கை என்ற பெயரில் குளித்துவிட்டு துணிகளை ஆற்றிலேயே விட்டுச் செல்கின்றனர்.இதனால் காவிரி நீர் மாசடைந்து காணப்படுகிறது.
ஆற்றில் கிடக்கும் துணிகளை எடுக்கும் பணியில் ஒரு சிலர் ஈடுபட்டனர். இந்த வகையில் 1500 கிலோ எடை துணிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இதேபோல் 2500 கிலோ எடை துணிகள் சேகரிக்கப்பட்டன என அந்த குழு தெரிவித்துள்ளது.எனவே காவேரி ஆற்றின் நீர் சீரடைகிறது.