fbpx
RETamil Newsதமிழ்நாடு

ஊரடங்கை நீடிப்பது அவசியம் ! பெரம்பலூரின் அவல நிலை

Its necessary to extend the curfew! The plight of Perambalur

உலகமே கொரோனா தொற்றினால் முடங்கி கிடக்கின்றது. உலக நாடுகள் பலவற்றிலும் இறப்பு விகிதம் பல ஆயிர கணக்கை தாண்டிவிட்டது. இறந்தவர்களை புதைக்க கூட இடம் இன்றி பல நாடுகள் தவித்து வருகின்றன. இந்த வகையில் இந்தியாவில் இறப்பு விகிதம் சற்று குறைவுதான் என்றாலும் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் அதிகம்.

தமிழகத்தில் மட்டும் தற்பொழுது 1,937 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நேற்று மட்டும் சுமார் 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சில பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சுமார் 35 மாவட்டங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளன. தர்மபுரி,கிருஷ்ணகிரி,மயிலாடுதுறை முதலிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப் படவில்லை.

இதனை தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமி சில பகுதிகளுக்கு தொடர்ந்து பொது முடக்கம் அறிவித்து உள்ளார். அந்த வரிசையில் பெரம்பலூர் நகராட்சியும்  ஒன்று. இந்த பொது ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றி 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறி மார்க்கெட்,சந்தை ,இறைச்சிக் கடை முதலிய அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டும் செயல்படுமாம். சுமார் 54 வாகனங்களில் பெரம்பலூர் நகராட்சி சார்பில் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறிய மளிகை கடைகள் மதியம் 1 மணி வரையில் மட்டுமே இயங்கலாம் என உத்தரவு போடப்பட்டு உள்ளது. மக்கள் அதிகமாக கூடும் சூப்பர் மார்க்கெட் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்,சூப்பர் மார்க்கெட்டுகள் டோர் டெலிவரி செய்யலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இத்தனை நாட்கள் நாம் கடைபிடித்த ஊரடங்கு எல்லாம் வீணாகி விடக் கூடாது என நேற்று முதல்வர் பழனிச்சாமி கூறி இருந்தார். இனியும் வரப்போகும் அனைத்தையும் எதிர்கொள்ள அரசு பிறப்பிக்கும் ஊரடங்கை நாம் பின்பற்றியே ஆக வேண்டும்.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close