RETamil Newsதமிழ்நாடு
சேலம் மாவட்டம் வாடப்பாடி அருகே நடந்த தீ விபத்தில் வீடு முழுவதும் தீக்கு இரையானது
சேலம் மாவட்டம் சந்தமலை கிராமத்தில் செல்வம் என்பவரின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கொழுந்து விட்டு எரிய தொடங்கிய தீ, வீடு முழுவதும் பரவியது, இதில் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 15 மூட்டை நெல் மற்றும் சொத்து பத்திரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன,இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினர்க்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.
இந்நிலையில் மின்கசிவு காரணமாக தான் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.