fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

ஆகஸ்ட் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்:

தமிழகத்தில் பாசனத்திற்காக தனி அதிகாரம் கொண்ட துறையை உருவாக்க வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது பாசன வடிகால்களை சீரமைப்பதற்கு திட்டம் உருவாக்க வேண்டும் என்றும் தமிழகத்திற்குப் பாசனத்திற்கான தனி தன்னாட்சி அதிகாரம் கொண்ட துறையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற ஆகஸ்ட் 16 தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாகவும், அப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்வார்கள் எனவும் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close