RETamil Newsதமிழ்நாடு
வீடுகளை தாக்கி சேதப்படுத்தும் காட்டு யானைகள் – பொதுமக்கள் அச்சம்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளை தாக்கி சேதப்படுத்தும் காட்டு யானைகள்.
காட்டுயானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேல் கூடலூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்குள் நுழைந்த யானைகள் கூட்டம் அங்குள்ள வீட்டை தாக்கி சேதப்படுத்தியது.
மேலும் வயல் நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது தொடர்ச்சியாக வீடுகளை தாக்கி வரும் யானைகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.