fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கவேண்டாம் – இந்தியாவிற்கு பெரியண்ணன் அமெரிக்கா வலியுறுத்தல் !

வெனிசுலாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

வெனிசுலா நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா விவாதித்துள்ளது.

வெனிசுலா அதிபராக மதுரோவை ஏற்க மறுக்கும் அமெரிக்கா, ஜுவான் குவைடோ என்பவரை வெனிசுலாவின் இடைக்கால அதிபராக அங்கீகரித்துள்ளது.

இந்நிலையில் மதுரோ அரசுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதில் மூன்றாவது பெரிய நாடாக வெனிசுலா உள்ளது.

வாஷிங்டனில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்பாம்பியோவை சந்தித்துப் பேசினார். வெனிசுலா மற்றும் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, வெனிசுலாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றும், மதுரோ அரசுக்கு பொருளாதார ஆதரவு அளிக்கும் வகையில் கச்சா எண்ணெய் வாங்கவேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் நாங்கள் ஒவ்வொரு நாட்டிலும் கேட்பது போலவே இந்தியாவிடமும் இதனை கேட்கிறோம் என்றும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close