RETamil Newsதமிழ்நாடு
மணப்பாறையில் தொடர் கொள்ளையால் – மக்கள் அச்சம்:
திருச்சி மாவட்டம் மஞ்சம்பட்டியில் தெற்கு தெருவைச் சேர்ந்த ஜோதி, புனிதன், ஜான் பீட்டர், முனுசாமி, எட்வின், வசந்தகுமார், அழகர் ஆகியோரின் வீடுகளில்பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
ஐந்து வீடுகளிலும் சுமார் 10 சவரன் நகை, 45 ஆயிரம் ரொக்கம், இரண்டு செல்போன், வெள்ளி பொருட்கள் என மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அடுத்தடுத்து ஐந்து வீடுகளில் நடைபெற்ற இந்த கொள்ளையால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.