RETamil Newsதமிழ்நாடு
திமுக தலைவர் கருணாநிதியை காண ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை காண ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகிறார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் ஜூலை 27ஆம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிய நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் உடல் நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.
கருணாநிதி உடல்நிலை சீராக வேண்டும் என்று தொண்டர்கள் உட்பட பொதுமக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்
இதன் காரணமாக மருத்துவமனை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.