Others
BjP வேட்பாளர் பாலகணபதி அவர்களைஆதரித்து தாமரைக்கு வாக்குசேகரிப்பு.
திருவள்ளூர்தனிதொகுதி பாரதிய ஜனதா கட்சியை வேட்பாளர் பாலகணபதி அவர்களை ஆதரித்து மாதவரம் சட்டமன்ற தொகுதி புழல் ஒன்றியம் சார்பாக ஒன்றிய தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமையில் கிராண்ட் லைன் ஊராட்சி பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர் கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் மட்டுமல்லாது பொது மக்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சாதனை விளக்க நோட்டீஸ்வழங்கப்பட்டது. திருவள்ளூர் தனித் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன் வி பாலகணபதி புழல் ஒன்றியம் முழுக்க வாகனத்தில் தாமரைக்கு வாக்கு சேகரித்தார் மண்டல தலைவர் முரளி கிருஷ்ணன் மகளிர் பிரிவு தலைவி வாசுகி உட்பட பலர் உடன் சென்றனர்.