fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

அனைத்தும் அதானிக்கே:விமான நிலைய பராமரிப்பு குத்தகை மத்திய அரசு தன்னிச்சை முடிவு!

டில்லி

தற்போது ஏழு மாநிலங்களில் உள்ள விமான நிலைய பராமரிப்பு குத்தகை மாநில அரசுகளை கலந்தாலோசிகாமல் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் விமான நிலைய கட்டுப்பாட்டு குழு ஆறு மாநிலங்களில் உள்ள விமான நிலையத்தை நடத்த மற்றும் பராமரிக்க டெண்டர்கள் கோரி இருந்தன. இதற்கான விதிமுறைகள் மாநிலங்களவையில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அதன்படி டெண்டர்கள் குறித்து விமான நிலயங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பது விதிமுறைகளில் ஒன்றாகும்.

இம்முறை லக்னோ, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத், கவுகாத்தி, மற்றும் மங்களூரு ஆகிய விமானநிலையங்களை நடத்துவது மற்றும் பராமரிப்புக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் அதானி குழுமத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் இது குறித்து மத்திய அரசு கலந்தாலோசனை ஏதும் நடத்தாமல் தானே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கேரள முதல்வர் அதானி குழுமத்தின் விமான நிலைய பராமரிப்பு அனுபவம் குறித்து வினா எழுப்பி வழக்கு பதிய உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது மாநிலங்களவையின் வழிகாட்டுதலை மீறி இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close