RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் பின்னலாடை மற்றும் இயந்திரங்களின் கண்காட்சி நடத்த ஏதுவாக நிரந்தர கண்காட்சி வளாகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் காங்கயம் சாலையில் நிட்ஸோ எனப்படும் பின்னலாடை இயந்திரங்களின் கண்காட்சி தொடங்கியது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் இயந்திரங்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.
கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக மாபெரும் வெற்றி பெரும் என்று கூறினார்.