அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு எதிரொலி : அதிரடி சோதனையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களின் வீடுகள்
தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினா் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .
கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறாத , மற்றும் குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்களை லஞ்சம் பெற்று தேர்ச்சி பெற வைத்துள்ளதாகவும் , அதிக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மேலும் ஒவ்வொரு தாளுக்கும் ரூ. 10 வீதம் பெறப்பட்டு உள்ளதாகவும் குற்றம் எழுந்துள்ளது.
இந்த வழக்கு தொடா்பான புகாரை விசாரித்த லஞ்ச ஒழிப்புத் துறையினா் தோ்வுக் கட்டுப்பாட்டு முன்னாள் அலுவலா் உமா உள்ளிட்ட 10 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த விவகாரம் தொடா்பான சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட அலுவலா் உமா, விஜயகுமாா், சிவக்குமாா் மற்றும் 7 உதவி பேராசிரியா்கள் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் விஜயகுமாா் வீட்டில் இருந்து 64 முக்கிய ஆவணங்களையும், உதவி பேராசிரியா் சிவக்குமாா் வீட்டில் இருந்து 14 ஆவணங்கள் என மொத்தம் 78 முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.