fbpx
Others

தேனி நாடார் சரசுவதி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்—சிறப்பு செய்தி.

தேனி மாவட்டம், தேனி நாடார் சரசுவதி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ( ELITES OF THENI NSHS 1977-78 )  முன்னின்று நடத்தும்மெகா மீட் – மேகம் 2026. ELITES OF THENI NSHS 1977-78  முன்னின்று நடத்தும்மெகா மீட் 2026.அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
தேனி நாடார் சரசுவதி உயர்நிலைப் பள்ளியில் பயின்ற நம் நட்புக் குழு மாணவர்கள் இணைந்து பங்கேற்கும் மெகா நண்பர்கள் சந்திப்பு கூட்டம் இன்று 22/02/2026 காலை சுமார் 10.00 மணிக்கு தேனி – அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் செல்லும் சாலையில் உள்ள கிரீன் கார்டன் வளாகத்தில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.இந் நிகழ்ச்சியில் 90 கற்கும் மேல் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இடையில் தேநீர் மற்றும் நொறுக்கு தீனிகள் வழங்கியும், முன்னாள் மாணவர் தேவகி மருத்துவமனை இயக்குனர் – மருத்துவருமான நாகேந்திரன் அவர்கள் அன்றைய மாணவ பருவத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தும், நாம் ஒவ்வொருவரும் நோயில்லாத வாழ்வு பற்றிய விபரங்களையும், மிக விரிவாக எடுத்துரைத்தார். பின்னர் ஒவ்வொரு மாணவரும் தங்களைப் பற்றிய தகவல்களை அறிமுகம் செய்ய….செய்ய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கியும், கௌரவிக்கப்பட்டனர்.பின்பு மதிய உணவு வேளையில் அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது.பின்னர் இரண்டாம் நிகழ்ச்சியில் அனைத்து முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல்கள் செய்ய, மாலை தேநீர் மற்றும் நொறுக்கு தீனிகள் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் அடுத்த நிலையில் சுற்றுலா செல்வது, மீண்டும் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது பற்றி ஆலோசனைகள் செய்த பிறகு நன்றியுரையுடன் முன்னாள் மாணவர்களின் மேகம் – 2026 நிகழ்வு இனிதே நிறைவுற்றது……..யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர்,தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close