fbpx
Others

நீடாமங்கலம்—அரசு உதவிபெறும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்-சிறப்பு செய்தி.

பிப்.11
நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் தேவி லெட்சுமி தலைமையிலும் முன்னாள் மாணவர் சங்க பொறுப்பாளர்கள் பாபு மனோகரன்,பத்மஸ்ரீ ராமன் முன்னிலையிலும் நடைபெற்றது. நிகழ்வில் மறைந்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகரன் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளியின் புதிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக ராமராஜ், துணைத்தலைவர்களாக செல்வராஜ், சந்தானராமன், செயலராக தேவி லெட்சுமி, துணை செயலராக செந்தில்குமார், செந்தில்நாதன், பொருளாராக ராஜேந்திரன் உள்ளிட்ட 15 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளியின் 107வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவதென்றும், மாணவர்களது எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில எழுத்தறிவு விருது பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கும், குழந்தைகள் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதிய பெற்றோர் ஆசிரிய கழக பொறுப்பாளர்களுக்கு பள்ளியின் இணை செயலாளர் ஜெகதீஸ் பாபு , பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் சக்தி, காந்திமணி, ஐயப்பன், மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்வின் முன்னதாக ஆசிரியர் சிங்கார கஸ்தூரிபாய் வரவேற்றார். ஆசிரியர் திராவிடமணி நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close